உறங்கு வதுபோலுஞ் சாக்காடு
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. வள்ளுவர் சாக்காடு என்னும் இறப்பையும் பிறப்பையும், உறக்கம் மற்றும் விழிப்பு நிலைகளோடு ஏன் ஒப்பிடுகிறார் ! இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மானிடர்க்கும் உறக்கம் மற்றும் விழிப்பு ஒரேயொரு முறை மட்டும் வருவதில்லை. மீண்டும் மீண்டும் உறக்கம் மீண்டும் மீண்டும் விழிப்பு என்று மாறி மாறி வந்து கொண்டேஇருக்கும் . அதுபோல இறப்பும் பிறப்பும் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும்( மானிடவர்க்கம் உள்பட) மாறி மாறி வந்து கொண்டேஇருக்கும். இப்பிறவி சூழலில் இருந்து விடுபட பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் " உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகிப்பவனுடைய யோகம் துன்பத்தை (பிறவி சூழலை) துடைப்பதாகிறது" என்னும் வழிமுறையை உபதேசிக்கிறார்.அத்தகைய யோகம் சத்குருவின் அருளால் சித்திக்கின் துரியநிலை என்னும் அரியநிலையை அடைந்து சாக்காடு செல்லாத வீடுபேறு அடையலாம் என்னும் பொருள் பட வள்ளுவர் முடிக்கிறார். சாய்ராம்
![Lock](https://cdn.indiblogger.in/v3/images/ui/icons/16_key.png)