"அன்பே சிவமாய் அமர்ந்திருந் த

Rajagopalan
Rajagopalan
from Trichy
11 years ago
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. எது அன்பின் வழி?Enter through the narrow gate. For wide is the gate and broad is the road that leads to destruction, and many enter through it.  But small is the gate and narrow the road that leads to life, and only a few find it.என்பது பைபிள்  வாசகம்.நாசி துவாரத்தில் இருந்து  நாபிக்கமலம் வரை  இடையில் உள்ள வழியே அன்பின் வழி !இதன் வழி செல்வதே Enter through the narrow gate என்பதுமானிடபிறவி எடுத்த அனைவர்க்கும் இவ்வழி ஒன்றேயாம்.அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரேஎன்பது திருமூலரின் திருமந்திரசொல்.உயிர் என்பது பிராணன் அல்லது மூச்சை குறிக்கும் சொல்.அது குருவருளால் திருத்தப்பட்டு வாசியாகின்  சிவா-யம்யாகும். சிவாயமாகின் அன்பும் பெருக்கெடுக்கும்.பின் "அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"என்னும் திருமந்திர   (அதாவது உயிர் நிலைபெறுதல்  அன்பின் வழியில்) ஸித்தி கிடைக்கும்.அஃதிலார்க்கு வாசி என்னும் சிவத்தினால் கட்டப்படாமல் வெறும் வாயு என்னும் சூத்திரத்தினால் மட்டும்  மானிட அங்கங்கள் கட்டப்பட்டு இருப்பின்   அது  என்புதோல் போர்த்த உடம்பாய் வாயு கட்டு அவிழிந்துபோயின் அதாவது உயிர் பிரிந்து போயின்   உடம்பும் சிதிலமடைந்து போய்விடும் என்னும் பொருள்பட வள்ளுவர் முடிக்கிறார்.சாய்ராம்   

 

LockSign in to reply to this thread