https://cimmakkuralon.blogspot.in/
இனையதளங்களை அமைப்பது பொழுது போக்கவும், தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவும் என அமையக்க் கூடாது நமது சமுதாயத்தால் மறந்துகொண்டிருக்கும். மறக்கடிக்கப்பட்டிருக்கும் மனிதர்களை, மகான்களை, மனதை சுத்தமாக்கும் கருத்துக்களை தன் மொழியின் சிறப்புகளை தொடர்ந்து வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். இந்த உறுதி நம்மிடம் இல்லாததால் ஏற்பட்ட விளைவுகள் இழப்புகளும் ஏராளம் உதாரணத்திற்கு அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருது பட்டியலில் ஆஸ்கார் அமைப்பு தன் விதிகளில் திருத்தம் செய்து ஜாக்கிசானுக்கு சிறப்பு விருது வழங்கியுள்ளது.
ஜாக்கிசனுக்காக விதியை தளர்த்திய அமைப்பு உலக திரைப்பட ஜாம்பவான்களே பார்த்து வியந்து போன நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு விருது வழங்க முன்வராதது என்? இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள். இதற்க்கு காரணம் நாம் எப்போது நமது மண்ணின் சிறப்பு, நம் முன்னோர்களின் அறிவு, நம் வரலாற்றின் உண்மை, நம்முடைய திறமை போன்ற விசயங்களை தேடித்தெரிந்து கொள்ளாமல் பிறரை பெருமைப்படுத்துவதிலும் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்தநிலை மாறுவது எந்நாளோ/