looking for feedback on my new blog"
looking for feedback on my new blog"
நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் .(1) வணக்கம் நண்பர்களே !வலைதளங்களில் (facebook & பிளாக்கர் )டெல்லி ,ஹரித்துவார் ,ரிஷிகேஷ் சிம்லா போன்ற உள்நாட்டு அனுபவங்களை பகிர்ந்து இருந்தேன் .இனி 2008 ம் ஆண்டும் ,2011 ம் ஆண்டும் இரண்டு முறை தாய்லாந்து செல்ல வாய்ப்பு கிட்டியது .அதன் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .என் அனுபவங்கள் இனிமேல் தாய்லாந்து,மற்றும் வெளி நாடு செல்லப்போகும் இனியவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் என்பதால் தான் . கமெண்ட்ஸ்,லைக் ,ஆலோசனைகளை வரவேற்கிறேன். முதல் முறை வெளிநாட்டு பயணம் என்றதும் எல்லோரையும் போல் மிக பதட்டத்துடன் தான் உணர்ந்தேன் .அதுவும் டார்கெட் அச்சிவ்மென்ட்டுக்காக கிடைத்த பரிசு அது ( 2008 ஸ்பான்சர் :supreme industries ltd@indo -supreme(p ) ltd. 2011 ஸ்பான்சர் khaithan fan @smfh (p )ltd .) ஆனாலும் ஒவ்வொரு முறை சென்றபோதும் குறைந்தது இந்திய மதிப்பில் rs 20000/- தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளவும் .அப்போதுதான் தன்னம்பிக்கையுடன் பயணத்தை எதிர்கொள்ள முடியும் .அந்த பணத்தை அமெரிக்க டாலராக முடிந்தால் நீங்களே மாற்றிகொள்வதுநலம். முடிந்தவரை எடை குறைவான luggege போதுமானது .எப்போதும் நம்முடன் இருக்கும்படியான சிறிய பாதுகாப்பான பை ஒன்று அவசியம்.(பாஸ்போர்ட் ,டிக்கெட்,மொபைல்,camara ,ப்ரோக்ராம் லிஸ்ட் ,emergency காண்டக்ட் no ,போன்ற அத்தியாவசிய பொருள்கள் அதில் இருப்பது முக்கியம் ). விமானம் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணிநேரம் முன்னதாக விமான நிலையத்தில் உள்ள நாம் செல்லவேண்டிய விமான நிறுவனத்தின் கவுன்டரில் என்ட்ரி போடுவது மிக முக்கிய முதல் வேலை .அப்போதுதான் எடை போட்டு பெட்டிகளை அனுப்பி விட்டு (முக்கிய அத்தியாவசிய thasthavege மட்டும் எப்போதும் நம் கையில் ) ரிலாக்ஸ் அக முடியும் .இனி விமான புறப்பாடு அறிவிப்பு வரை அங்கேயே வெய்ட் செய்து பின் immigration attain பண்ண முடியும் .எல்லாம் முடிந்து immigration வருமாறு அறிவிப்பு வந்தது .தொடருவோம் .......!